திருச்சி மாவட்டம் திண்டுக்கல் திருச்சி பிரதான சாலை முத்துக்குளம் எதிரே உள்ள வேளாண் கல்லூரி அருகில் மழை நீர் வடிகால் கரையில் உள்ள புங்கமரத்து கிளையில் ஒருவர் தூக்கு மாட்டி தொங்கியதில் அறுந்து கீழே மழைநீர் வடிகாலில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த ராம்ஜி நகர் காவல் நிலைய காவலர்கள் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்தவர் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. மேற்கண்ட நபர் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரவில்லை .உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு ராம்ஜி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் ராம்ஜிநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன், இரண்டாம் நிலை காவலர் வெங்கடாஜலபதி , ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

0 Comments