திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா சேலம் பேருந்து நிறுத்தம் அருகில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தவர், உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சிகிச்சை பலனின்றி அன்று இரவு இறந்து விட்டார்.
தகவல் அறிந்த கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கையில், இறந்து போன முதியவர் பெயர், விலாசம் கண்டறிய முடியவில்லை. இறந்த நபரின் பிரேதம் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் கொள்ளிடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி, முதல் நிலை காவலர் ஜெகன், ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத பிரதத்திற்கு உரிய முறையில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

0 Comments