// NEWS UPDATE *** கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து - -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு *** ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் நினைவு நாள் - திருச்சி ஜோசப் கல்லூரியில், நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் நினைவு நாள் - திருச்சி ஜோசப் கல்லூரியில், நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி நினைவு தினம், இந்தியா முழுவதும் இன்று  அனுசரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருச்சியில் உள்ள புனித வளனார் கல்லூரியில், 1954ஆம் ஆண்டு அவர் பயின்று,கல்லூரிக்கு பெருமை சேர்த்த வகையில், வருடம் தோறும் அவரது நினைவு நாளை, கல்லூரியில் சிறப்பாக நினைவு கூறப்பட்டு வருகிறது.

இன்று அவரது நினைவு நாளையொட்டி, கல்லூரியில் உள்ள அரங்கில், அவரது நினைவு நாள் கல்லூரி அதிபர் பவுல்ராஜ்மைக்கேல் தலைமையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக, திருச்சிராப்பள்ளி மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் ராதாகிருஷ்ணன்,  கலந்து கொண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் மனித நேயம், அறிவியல் ஞானம், மருத்துவ ஞானம், மாணவர்களின் ஊக்குவிப்பு ஆகிய பெருமைகளை எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வில் கல்லூரி செயலர் ஆரோக்கியசாமி, சேவியர் கல்லூரி முதல்வர் ஆரோக்கியம், இணை முதல்வர் குமார்,  இயற்பியல் துறை தலைவர், ஜான்சன் மற்றும் மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments