// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி ஸ்ரீரங்கம் 3வது வார்டு பகுதியில் போட்டியிடும் லீமா சிவகுமார், வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர் சிந்தை எஸ் எம்.சேட்டு உடன் சந்திப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் 3வது வார்டு பகுதியில் போட்டியிடும் லீமா சிவகுமார், வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர் சிந்தை எஸ் எம்.சேட்டு உடன் சந்திப்பு

தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான வேட்புமனுதாக்கல் நேற்றோடு முடிவு பெற்றது.

இன்று அதற்க்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிலையில் திருச்சியில் வாக்கு சேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அந்தவகையில் பாரதிய ஜனதா கட்சி மாநில மகளிரணி செயலாளர், லீமா சிவகுமார் ஸ்ரீரங்கம்,  3வது வார்டு பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.


இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவன தலைவர் சிந்தை எஸ் எம்.சேட்டு அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். 

இந்நிகழ்வில் ராக்கெட் நாகேந்திரன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments