// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** அதிமுக 50 வது வார்டு வேட்பாளர் நஸிமா ஃபாரிக் தீவிர பிரச்சாரம்

அதிமுக 50 வது வார்டு வேட்பாளர் நஸிமா ஃபாரிக் தீவிர பிரச்சாரம்

 



திருச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் நஸிமா ஃபாரிக் 50 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதியில் ஆலம் தெரு, காஜாபேட்டை  உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் நான் பொது மக்கள் சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன் பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் நான் சேவை செய்யக் கடமைப் பட்டுள்ளேன். அரசு சலுகைகள் ஆன அரசு இடமிருந்து பொது மக்களுக்கு என்னென்ன சலுகைகள் தேவைப்பட்டாலும் தொடர்ச்சியாக  பொது மக்களுக்கு பெற்றுத் தருவேன் என்னை பொது மக்கள் தேர்ந்தெடுத்தால் மக்களில்  ஒருவராக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

   இந்நிகழ்வில்  வட்ட செயலாளர் .சுந்தர் வடிவேல் .ரபிக். மாவட்ட.மீனவரணி பொருளாளர் சரவணன் . பாலக்கரை பகுதி அவைத் தலைவர் ரவி பகுதி துணைச் செயலாளர் முத்துக்குமார் நவ்ரோஜ் அபுதாகிர் விமல் ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

0 Comments