// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி 52 வது வார்டு வேட்பாளர் துர்கா தேவி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

திருச்சி 52 வது வார்டு வேட்பாளர் துர்கா தேவி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்தநிலையில் திருச்சி  52 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் துர்கா தேவி போட்டியிடுகிறார்.


 இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு
வருகிறார். அந்த வகையில் இன்று 52 வது வார்டுக்குட்பட்ட மேலப்புதூர், அரசமரத் தெரு, மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர் செல்வராஜ், மேலப்புதூர் ராஜன்பாபு, சங்கரன், கிங் ரஜினி, ராஜகணபதி, குமார், மார்சிங் பேட்டை பிரபு, முருகா, மோகன் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த மேகலா, ஜாக்குலின், யமுனா, பானு, சௌந்தர்யா, செந்தில் ராஜலட்சுமி, ரெக்சி, சிவானி உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments