// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி திமுக 53 வது வார்டு வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்

திருச்சி திமுக 53 வது வார்டு வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்

 திருச்சி மாநகராட்சி 53 வது வார்டில் திமுக சார்பில் கலைச்செல்வி ஜெகநாதன் போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த கலைச்செல்வி ஜெகநாதன் தொடர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 


அந்த வகையில் இன்று 53 வது வார்டுக்குட்பட்ட நியூ ராஜா காலனி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்கள் மத்தியில் பிரபலமான வேட்பாளர் கலைச்செல்வி  ஜெகநாதனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

இந்த வாக்கு சேகரிப்பின் போது 53 வது வட்ட கழக செயலாளர் தனசேகரன், பீமநகர் சதீஷ்குமார், கதிர்வேல், இக்பால், பிரசாந்த், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments