// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 52 வது வார்டு அதிமுக வேட்பாளர் செபஸ்தி பிளாரன்ஸ் ஜெயஸ்ரீ தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி 52 வது வார்டு அதிமுக வேட்பாளர் செபஸ்தி பிளாரன்ஸ் ஜெயஸ்ரீ தீவிர வாக்கு சேகரிப்பு

 திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் அதிமுக வேட்பாளர் செபஸ்தி பிளாரன்ஸ் ஜெயஸ்ரீ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 52 வது  வார்டில் அதிமுக சார்பில் செபஸ்தி பிளாரன்ஸ் ஜெயஸ்ரீ  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயஸ்ரீ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 52 வது வார்டு பகுதிகளில் 


சையது முஸ்தபா ராவுத்தர் தெரு, கண்டி தெரு, பென்சனர் தெரு, சவேரியார் கோவில் தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது  வட்ட செயலாளர் செல்வகுமார், காதர்பாஷா, லூர்து, அப்துல்ரஹீம், சித்ரா,

உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments