ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மத்திய அரசின் GST அலுவலகம் நோக்கி கண்டன உரிமை பேரணி அறிவிப்பு
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் புதிய பிரச்னை உருவானது. அங்குள்ள அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தலையில் முக்காடாக அணியும் பர்தாவை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது.
அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள அரசு கொப்பா கல்லூரியில் வேறுவிதமான பிரச்னை ஏற்பட்டது. அங்குள்ள மாணவர்கள், காவித்துண்டு அணிந்துவந்திருந்தனர். மாணவியர் பர்தா அணிவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். முஸ்லீம் மாணவியர் பர்தா அணிந்தால் தங்களையும் காவித்துண்டு அணிய அனுமதிக்க வேண்டும் என புதிய கோரிக்கையையும் வைத்தனர்....கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடுத்து அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை அவமதிக்கும் கர்நாடகா அரசையும், மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் 12-02-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் இருக்கக்கூடிய மத்திய அரசு அலுவலகமான GST அலுவலகத்தை நோக்கி உரிமை பேரணி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெறும் என அறிவிப்பு

0 Comments