// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 6 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திருச்சி 6 வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 6 வது வார்டில் அதிமுக சார்பில் ஜெ.கவிதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த கவிதா, தொடர்ந்து தனது பகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

அந்த வகையில் இன்று 6வது வார்டுக்குட்பட்ட  தாத்தாச்சாரியார் கார்டன், மாம்பழச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர்கள் கொளஞ்சி மற்றும் தமிழரசன், கண்ணன், சாமிகண்ணு, கரிகாலன், பவர் சிங், செந்தில், கஸ்தூரி உட்பட வட்டக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.



Post a Comment

0 Comments