// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மாத்திரை வடிவில் நூதன முறையில் தங்கம் கடத்தல் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

மாத்திரை வடிவில் நூதன முறையில் தங்கம் கடத்தல் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

 சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இன்று திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இரண்டு பயணிகளின் உடமைகளை முழுவதுமாக சோதனை செய்தனர்.அந்த இரண்டு பயணிகள் நூதன முறையில் பேஸ்ட் மற்றும் மாத்திரை வடிவில் மறைத்து எடுத்து வந்த சுமார் ரூ81 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 652 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


மேலும் மத்திய வான் சுங்கத்துறை அதிகாரிகள், நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த இரு விமான பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Post a Comment

0 Comments