// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மகாத்மா காந்தியை கொன்றவர்கள் பெயரில் விருது வழங்குவதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தியை கொன்றவர்கள் பெயரில் விருது வழங்குவதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சித்து கைதாகி சிறையில் உள்ள இந்து மகா சபையை சேர்ந்த சாமியார் காளிச்சரண் மகாராஜ்க்கு, இந்து மகாசபை சார்பில் கோட்சே - ஆப்தே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு சட்டசபையில் விலக்கு வழங்க தீர்மானம் இயற்றப்பட்டு  ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதை கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக



திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் இன்று திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது 

Post a Comment

0 Comments