தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை கோர்ட்டு வழிகாட்டுதல்படி, கருணையோடு தமிழக அரசு விடுவிக்கக் கோரி முதலமைச்சருக்கு கடிதம் எழுதும் பிரச்சார இயக்கம் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் நடந்தது. எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகர் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடந்த இந்த பிரசார இயக்கத்திற்கு தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார்.
57-வது வார்டு வட்ட தலைவர் ஷாஜகான், மேற்கு தொகுதி தலைவர் அப்பாஸ், 62-வது வார்டு வட்டச்செயலாளர் சேக் அப்துல்லா, துணைத்தலைவர் நாகூர் கனி, மேற்குத் தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா, தொழிற் சங்க துணைத்தலைவர் மீரான் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறையில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்க அதை கண்டித்து திருச்சி மண்டல தலைவர் அப்துல்லா ஹாசன் பைஜி கண்டன உரையாற்றினார்
பிரசார இயக்கத்தில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, 57-வது வட்டச் செயலாளர் சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரச்சார இயக்கத்தின் போது தமிழக சிறையில் 10 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்றுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சருக்கு கடிதம் எழுதி அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
0 Comments