// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சி வேலன் மருத்துவமனையில் அபர்டுபிளன் – ஸ்வத் நிறுவனத்துடன் இணைந்து நவீன மருத்துவ ஸ்மார்ட் கார்டு திட்டம் தொடக்கம்

திருச்சி வேலன் மருத்துவமனையில் அபர்டுபிளன் – ஸ்வத் நிறுவனத்துடன் இணைந்து நவீன மருத்துவ ஸ்மார்ட் கார்டு திட்டம் தொடக்கம்

திருச்சி  வேலன் சிறப்பு மருத்துவமனையில் முதல் முறையாக அபர்டுபிளன்-ஸ்வத் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கான மருத்துவ அட்டை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர்



இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர், வேலன் சிறப்பு மருத்துவமனை நிறுவனத் தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். டாக்டர். ராஜ்வேல் திட்டத்தை துவங்கி வைத்தார்.


சிறப்பு அழைப்பார்களாக திருச்சி விமான நிலைய நிதித்துறை அதிகாரி கணபதி, அரியலூர் ராம்கோ சிமெண்ட் மனிதவள மேலாளர் ஜான்சன் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி முனைவர். கேப்ரியல் மரியதால், ஆகியோர் கலந்து கொண்டனர். அபர்டுபிளன்-ஸ்வத் நிறுவனத்தின் மண்டல மேலாளர் லதா வரவேற்புரை வழங்கினார்.

ராகவேந்திரன் மற்றும் சுப்ரமணி சிறப்புரை வழங்கினார்கள்.

மருத்துவ அட்டையின் பயன்கள்:-

இந்த அட்டையின் மூலம் தனிநபர் ஒருவர் தங்களின் குடும்பத்திற்கு ஏற்படும் மருத்துவ செலவை குறைக்கும் வாய்ப்பு ஏற்படுவதாகவும். வேகுமதி மூலம் அட்டைதாரர் தான் செலுத்தும் தொகையில் 10% தொகை மீண்டும் பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ அட்டையில் விபத்து மருத்துவ காப்பீடு ரூ.2.5 லட்சம் இனைக்கப்பட்டுள்ளதாகவும். அட்டைதாரர் தகுதிக்கேற்ப கடன் பெறும் வசதி மற்றும் மாத தவணையில் திரும்ப செலுத்தும் வசதி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

வேலன் சிறப்பு மருத்துவமனையில் வார நாட்களில் பொதுமக்கள் மருத்துவ அட்டையை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments