// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 2வது பிரதேச நிலை உடற்தகுதி சிலம்பம் போட்டி நடைபெற்றது

2வது பிரதேச நிலை உடற்தகுதி சிலம்பம் போட்டி நடைபெற்றது

 

நாமக்கல் மாவட்டத்தில் 2வது பிரதேச நிலை (Divisional leval) உடற்தகுதி விளையாட்டு சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2022 போட்டி  நடைபெற்றது

இதில் சேலம், கரூர் , திருச்சி, ஈரோடு , நாமக்கல் போன்ற மாவட்டத்திலிருந்து சுமார் 225 பேருக்கு மேல் கலந்துக் கொண்டார்கள்



இதில் திருச்சி பொன்மலை சாமி தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 18 தங்கம், 4 சில்லர், 3 வெண்கலம் பெற்று வந்தவருக்கு , பொன்மலையில் பாராட்டு விழா நடந்தது

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு நிர்வாகி ஆர்.கே.ராஜா, சாமி தற்காப்பு கலைக்கூடம் ஆசிரியர் துரை.ஜீவானந்தம் முன்னிலை நடந்தது


சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று , பதக்கம் வாங்கியவருக்கு திருச்சி மாநகராட்சி 46 வது மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ் பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்

இந்த நிகழ்வில் ஜீ.சஹானா ஸ்ரீ, ஆர்.ஹேமா ஸ்ரீ,
ஹர்சா வர்த்தினி
தீபிகா ஜே.சக்தி ஸ்ரீ,
கே.வி பிரபஞ்சன் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் ஈஸ்வரன் , சீனிவாசன்,பாலு மற்றும்  பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்

Post a Comment

0 Comments