திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்...அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் அவர்களது வார்டு பிரச்சனைகளை எடுத்துரைத்தனர்...இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 28 வது வார்டு கவுன்சிலர் முகமது பைஸ் வார்டு மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை மாமன்றத்தில் எடுத்துரைத்தார்
தென்னூர் மேட்டு தெரு மக்களுக்கு புதிய கழிப்பறை கட்டி தர வேண்டும்...புது மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சத்துணவு கூடம், சமயலறை, கழிவறை க்கு புதிய கட்டிடம் கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாரதி நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான புதிய கோவில் கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மாண்புமிகு மேயர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சத்யா நகர் வழியாக செல்லும் கழிவுநீர் வாய்கால் ரயில்வே பாலத்தை கடந்து செல்லும் போது 30, 22 ஆகிய வார்டு பகுதிகளில் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி எனது 28 வது வார்டு கழிவுநீர் வெளியேறும் பிரச்சினை யை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அண்ணாநகர் முழுவதும் கழிவுநீர், மழைநீர் வடிந்து செல்லும் பாதையை தூர்வாரி ஆக்கிரமிப்பு களை அகற்றி மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்....
மாகத்மா காந்தி, ராஜாஜி வித்யாலயா பள்ளி கூடங்கள் அருகில் மாணவ மாணவிகளின் நலன்களை கருத்தில் கொண்டு திறந்த வெளி சாக்கடையை சிமெண்ட் பலகை மூலம் மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்..மேலும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் வகனங்களை நிறுத்த வசதியாக தென்னூர் மேம்பாலம் கீழ் உள்ள கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். Saahas அமைப்பிடம் அந்த இடங்களை ஒப்படைத்தால் அதனை தூய்மையாக பாராமரித்து பூங்காக்களை அமைத்து அப்பகுதி அழுகு படுத்தப்படும். அதற்கு மாண்புமிகு மேயர் அவர்கள் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அண்ணாநகர் அறிவியல் பூங்கா போதிய பாரமரிப்பு இன்றியும், குடிநீர் இல்லாமல், கழிவறைகள் தூய்மை இல்லாமலும் இருக்கிறது குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை
28 வது வார்டில் தேர் திருவிழா தொடங்க இருப்பதால் தேர் செல்லும் சாலை உடனடியாக பழுது பார்த்து தார் சாலைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக் கோரிக்கை
தென்னூர் முதல் சத்யா நகர் வரை சுமார் 43 தெருக்கள் எனது வார்டில் அமைந்து இருக்கின்றது.4500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அத்தனை தெருக்களிலும் சாக்கடை களை புதிய வடிவமைப்புடன் கட்டித் தர வேண்டும்.
பாதாள சாக்கடைகள், குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும், மின் விளக்குகள் மாற்றி தர வேண்டும். மின் கம்பங்கள் இல்லாத இடத்தில் புதிய மின் கம்பங்களை அமைத்து அதிக வெளிச்சம் தரும் மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என உரையில் தெரிவித்திருந்தார்
தென்னூர் குத்பிஷா நகர் முகப்பில் குப்பைகள் கொட்டும் இடம் தற்பொழுது தூய்மை படுத்த பட்டுள்ளது. அவ்விடத்தில் தனியார் பங்களிப்புடன் நூலக கட்டிடம் அமைக்க அனுமதி தர வேண்டும் என மாண்புமிகு மேயர் அவர்களை கேட்டு கொண்டு மாமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்து எனது உரையை நிறைவு செய்தார்.....
0 Comments