// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணி நியமன ஆணை: அமைச்சர்கள் நேரு, மகேஷ் வழங்கினர்

திருச்சியில் மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் பணி நியமன ஆணை: அமைச்சர்கள் நேரு, மகேஷ் வழங்கினர்

திருச்சியில் 31 மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்....

அருகில் மாவட்ட கலெக்டர் சு.சிவராசு,  மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எஸ்.இனிகோ இருதயராஜ், துணை மேயர் ஜி.திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர்.சாவித்திரி ஆகியோர் உள்ளனர்...



Post a Comment

0 Comments