// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** மத்திய அரசை கண்டித்து BSNL அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து BSNL அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 அகில இந்திய தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 2 வது நாளாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் நேற்றும் இன்றும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

மத்திய அரசு தனியார் மயம் கொள்கையை கைவிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து இருந்தனர், அதன்படி இன்று 2 வது நாளாக நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments