புதுச்சேரி மாநிலம் காரைக்கால் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தர்கா 199-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இஸ்லாமிய மார்க்கத்தில், இறைத்தூதரில் சிறப்புக்குரியவராகப் போற்றப்படும் மஸ்தான் சாஹிப் நினைவாக காரைக்காலில் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவின் கந்தூரி விழா பெரும் விமர்சையாக இன்று நடைபெற்றது.
பெரிய பள்ளிவாசல் முகப்பிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புனித கொடி ஏற்பட்டு கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட வண்ண ரதம், கப்பல் ரதம் உள்ளிட்ட ரதங்கள் ஊர்வலத்தில் பங்கேற்றன. காரைக்காலில் பாரதியார் வீதி, லெமர் வீதி, திருநள்ளாறு சாலை உள்ளிட்டமுக்கிய வீதிகளின் வழியே சென்ற ஊர்வலம் இரவு தர்கா வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து புனித கொடி தூ-வா ஓதப்பட்டு ஏற்றப்பட்டது.விழாவில் புதுச்சேரி மாநிலம் மட்டுமில்லாமல் தமிழகம் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் தாபூத்-எனும் சந்தனம் பூசும் விழா வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
0 Comments