// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஈரோடு திமுக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர் கலந்துரையாடல் நடைபெற்றது

ஈரோடு திமுக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர் கலந்துரையாடல் நடைபெற்றது

 ஈரோடு திமுக நிர்வாகிகள்  மாமன்ற உறுப்பினர் கலந்துரையாடல்  நடைபெற்றது

இந்த கூட்டத்திற்கு வீட்டுவசதி துறை அமைச்சர் சூ.முத்துசாமி அவர்கள் தலைமை வகித்தார். சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்...ஈரோடு  நகரச் செயலாளர் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.. 

தமிழ்நாடு கேபிள் வாரியத்தலைவர்குறிஞ்சி சிவக்குமார், முன்னாள் மேயர் குமார் முருகேஷ் துணை மேயர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் மற்றும் 54 வார்டு கவுன்சிலர்கள் மற்றும்  60 வார்டு செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்   கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


வீட்டுவசதி துறை அமைச்சர்  முத்துசாமி அவர்கள்  கூட்டத்தில் பேசும் போது...

ஈரோட்டில் 60 வார்டுகளில் பணியாற்றக்கூடிய செயலாளர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் அந்த பகுதியை சிறப்பான முறையில் செயலாற்ற வேண்டும்... மக்களுடைய குறைகளை கேட்டு  உடனுக்குடன் தீர்வு கொடுக்க வேண்டும்... அப்படி அந்தந்த பகுதியில் யாரும் பணியாற்ற வில்லை என்றால் உடனடியாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் சரியான முறையில் பணியாற்ற வில்லை என்றால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பணியாற்றதவர்களை  நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்றார்கள்...  தொண்டர்கள் யாரும் தவறான வழியில் செல்லாமல் கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத் தர வேண்டும் அடுத்து வரக்கூடிய கட்சி தேர்தலிலும் மக்களவை  தேர்தலிலும் வரக்கூடிய கூட்டுறவு தேர்தல்களிலும் நீங்கள் தேர்வு செய்ய படலாம் ஆகவே திமுக நிர்வாகிகளும் கவுன்சிலர்களும் மக்கள் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று சு. முத்துசாமி அவர்கள் பேசினார்கள்....


ஈரோடு நிருபர் சேக் அலாவுதீன் 


Post a Comment

0 Comments