// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியது.

திருச்சி  சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவினை முன்னிட்டு பூச்சொரிதல் விழா துவங்கியது. இதில் கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில்  கோயில் பணியாளர்கள் மற்றும்  கிராம பொதுமக்கள் அம்மனுக்கு கூடை கூடையாக பூக்களை சாத்தினர்.



தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது.இக் கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில்  மிகவும் பிரசித்திப் பெற்ற விழா பூச்சொரிதல் விழா ஆகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி , பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை  28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.  


மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம்  செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காவும், தன்னை தரிக்க வரும்  பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும் தீவினைகளும் அனுகாது சகல  சௌபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்கு 28 நாட்கள்  பச்சை பட்டினி விரதம்  வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாக கடைசி ஞாயிறு வரை இருப்பது   தனிச்சிறப்பு ஆகும்.


கடந்த 13ம் தேதி  இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து  சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டு கட்டுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில்  யானை மீது பூக்களை கொண்டு வந்த கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை கூடைகளில் தலையில் சுமந்தும், கையில் ஏந்தி வந்து அம்மனு சாத்தினர்.


Post a Comment

0 Comments