// NEWS UPDATE *** 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி ********* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் *** திருச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கம்,DYFI முற்றுகை போராட்டம்

திருச்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கம்,DYFI முற்றுகை போராட்டம்

 திருச்சியில்  டாஸ்மாக்கடையை  திறக்கும் தமிழக அரசைக் கண்டித்து மாதர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம். உறையூர் பகுதியில்  ஏற்கனவே அரசின் இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது.



இதனிடையே ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த பகுதியாக உள்ளதும், பெண்களுக்கான கடைகள் மற்றும் வணிகவளாகங்கள் நிறைந்த பகுதியில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே புதிதாக திறக்கப்படும் கூடுதல் மதுபானக்கடையினால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் எனவே மதுபானக்கடையினை திறக்கும் அரசின் முடிவைக் கைவிடவலியுறுத்தி திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் கட்சியின் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து புதிதாக திறக்கவுள்ள மதுபானக்கடையினை முற்றுகையிட்டு, கடையின் வாசலில் அமர்ந்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்


தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கண்டணகோஷம் எழுப்பினர்..  தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அருகிலுள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் திறக்காமல் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Post a Comment

0 Comments