BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி சமயபுரம் கோயில் சித்திரை தேரோட்டம்...!லட்சகணக்கானோர் பங்கேற்பு

திருச்சி சமயபுரம் கோயில் சித்திரை தேரோட்டம்...!லட்சகணக்கானோர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தேரோட்டம் விழாவில் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தார்.சமயபுரம் மாரியம்மன் கோயில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி, சிவபத்தில் எழுந்தருளி மும்மூர்த்திகளை நோக்கு மாயாசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் மரபு மாறி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அனுகாது, சகல செளபாக்கியங்களும் கிடைக்க, அம்மனே பக்தர்களுக்குகாக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இக் கோயிலின் அம்பாளின் தனிச்சிறப்பு.

அம்மன் சிறப்புமிக்க பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல்,அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் போன்ற ஐந்து தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில்  அம்பாள் அருள்புரிந்து வருவது இக்கோயிலின் புராண மரபு.



இத் தேரோட்ட விழா இம் மாதம் 10 -ம் தேதி  கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடந்து 10 -ம் தேதி முதல் 17 - ம் தேதி வரை தினசரி காலை அம்மன் பல்லாக்கில் புறப்பாடாகி, தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதியுலாவும் நடைபெற்றது . 19 -ம் தேதி காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது.


 

Post a Comment

0 Comments