NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** ரேஷன் கடைசியில் பிரதமர் படத்தை வைக்க முயன்ற பா.ஜ.க வினர்....! திமுக- பா.ஜ.க இரு தரப்பு மோதல்

ரேஷன் கடைசியில் பிரதமர் படத்தை வைக்க முயன்ற பா.ஜ.க வினர்....! திமுக- பா.ஜ.க இரு தரப்பு மோதல்

திருச்சியில் ரேஷன் கடையில் மோடி படத்தை வைக்க முயன்ற பா.ஜ.க வினர்   திமுக - பா.ஜ.க  இருதரப்பு மோதல் போலீசார் குவிப்பு

திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் இன்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பா.ஜ.க மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் பா.ஜ.க  கட்சியினர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை கடையில் மாட்டினர் . 

அப்போது ரேஷன் கடையில் நின்றிருந்தார் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் 55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் மோடியின் பாடத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

அப்போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் இடம் வந்த காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் தலைமையிலான காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். 

இந்த தள்ளுமுள்ளு பிரச்சனையின் போது பிரதமர் மோடி படம் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது பத்திரிக்கையாளர்கள் கீழே விழுந்து கிடந்த மோடியின் படத்தை வீடியோ எடுக்க முற்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேகமாக வந்து மோடியின் படத்தை எடுத்து சாக்கடையில் வீசி எறிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்  கண்டோன்மெண்ட் பா.ஜ.க மண்டல தலைவர் பரமசிவம் சென்னை திமுகவில் தாக்கியதாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாரதிய  ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் இல.கண்ணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்த காவல்துறை இடத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து பிஜேபியினர் வந்ததை அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷன் கடைக்கு முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு அவர்களை வெளியேற்றக் கோரி காவல் துறையுடன் வாக்குவாத ஈடுபட்டு வருகின்றனர். இதன் சார்பில் இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments