BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் மாளிகையாகிவிட்டது. தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - மணியரசன் பேட்டி

ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் மாளிகையாகிவிட்டது. தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - மணியரசன் பேட்டி

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வியக்கத்தின் தலைவர் மணியரசன்,

இந்த செயற்குழு கூட்டத்தில் கர்நாடக அரசு மேகத்தாட்டுவில் அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது.....

அங்கு அணை கட்ட அனுமதிக்க கூடாது என முதலமைச்சர் பிரதமரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதே வேளையில் காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள செளமித்ர குமார் ஹல்தர் மேகத்தாட்டுவில் அணைக்கட்ட தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறார்...

அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்திருக்க வேண்டும். அவரை நீக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்......

இலங்கை தமிழர்கள் அங்குள்ள பஞ்சத்தின் காரணமாக தமிழகம் வருகிறார்கள். அவர்களுக்கு உணவும், மருந்தும் வழங்க அனுமதி கேட்டுள்ளார்கள் ஆனால் இதுவரை ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை, தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.....

தமிழர்கள் என்பதாலேயே இந்திய அரசு இலங்கையையிலிருந்து வரும் தமிழர்களை புறக்கணிக்கிறார்கள். இனப்பாகுபாடு காட்டுகிறார்கள். அவ்வாறு செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்..தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே என தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம் என்றார். 

ஆளுநர் மாளிகையில் சனாதான இயக்கத்தின் கூட்டம் நடந்துள்ளது. இது ஆளுநர் மாளிகை என்பது ஆர்.எஸ்.எஸ் மாளிகையாகி விட்டதை காட்டுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்.எஸ்.எஸ் ரவி என்றே கூறலாம். ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று தான். முதல் கட்டமாக ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாட்டிலிருந்து மாற்ற வேண்டும்....

நல்ல லட்சியத்தை முன் வைத்து இயங்காத அரசியல் தலைமை இல்லாததால் தான் பண்பாட்டு சீரழிவுகள் இளைஞர்களிடம் வந்துள்ளது. 

அ.தி.மு.க நாடக கம்பெனி போல் செயல்படுகிறது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியவர்களே தற்போது எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments