// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி ஜமாத்துல் உலமா சபை சார்பில் ஹஜ்,உம்ரா விளக்க கூட்டம்

திருச்சி ஜமாத்துல் உலமா சபை சார்பில் ஹஜ்,உம்ரா விளக்க கூட்டம்

திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பில் ஹஜ்,உம்ரா, ஜியாரத்  செயல் விளக்க கூட்டம் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் நிஸ்வான் மதரஸா பள்ளிவாசலில்  மெளலானா முப்தி முஹம்மது ரூஹூல் ஹக் ஹழ்ரத் தலைமையில்  நடைபெற்றது...  

இந்த கூட்டத்தில்  ஹஜ், உம்ரா  பற்றி இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டிய செயல் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த  உலமாக்கள் மற்றும் இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிக்கள் கலந்து கொண்டனர்.. 

திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார், பென்சனர் தெரு பள்ளிவாசல் உலமாக்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


திருச்சி ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் மெளலானா அல் அமீன் யூசுபி ஹழ்ரத்   வரவேற்புரை ஆற்றினார்..ஹஜ்,உம்ரா  செய்யும் வழிமுறை  குறித்தும்  புனித ஹஜ்ஜில் எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்றும்,  ஹஜ்,உம்ரா, ஜியாரத் குறித்த சிறப்புகள் போன்ற பல்வேறு தலைப்புகளில்  மெளலானாக்கள் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்

Post a Comment

0 Comments