இந்தியாவின் நவசிற்பி என்று அழைக்கப்படுகிற இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 58வது நினைவு நாளையொட்டி இந்தியா முழுவதும் காங்கிரஸார் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி கண்டோன்மெண்ட் சேவா சங்கம் பள்ளி எதிரில் உள்ள ஜவஹர்லால் நேருவின் முழு உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நிர்வாகிகள் வில்ஸ்முத்துக்குமார், சிவாஜிசண்முகம், உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
0 Comments