NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கருத்தரங்கத்தில் " நெகிழி தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்" என்ற விழிப்புணர்வு

தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கருத்தரங்கத்தில் " நெகிழி தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்" என்ற விழிப்புணர்வு

 திருச்சி ஜமால் முகமது  கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.நிகழ்வில் கல்லூரியின் முதல்வர்  டாக்டர் எஸ்.இஸ்மாயில் மொஹிதீன்   தலைமை வகித்து தலைமையுரையாற்றினார், 

கல்லூரியின் செயலர்டாக்டர் ஏ.கே.காஜா நீஜாமுதீன்  முன்னிலை வகித்தார் . 

தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள் .நிகழ்வில் "நெகிழி தவிப்போம் துணிப்பையை எடுப்போம்" என விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது.



 மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிறப்பு விருந்தினராக : திருமதி ரம்யாலட்சுமி அவர்கள்: தமிழகத்தின் கடற்கரை வளங்கள். இந்தியாவின் கடற்கரை வளங்கள், மீன்பிடித்துறைமுகங்கள், மீன்வளர்ப்பு, மீன் வளர்ப்பு முறைகள், வகைகள், மீன்வளர்ப்ப மேலாண்மை, விற்பனை, மீன்களில் உள்ள சத்துகள், கடல்வளம், நிலவளம், நீர் வளம் குறித்து விரிவாக பேசினார். மீன்வளத்துறை சார் படிப்புகள், தொழில் வாய்ப்புகள், போட்டித் தேர்வு என அரிய தகவல்களை பயனுள்ள முறையில் வழங்கி உரையாற்றினார்.


 தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செல்வராஜ், தமிழ்த்துறை புலத்தலைவர் முகமது ஹசன் மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற உறுப்பினர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர்  மன்ற நிர்வாகி பி.பிரவீன் வரவேற்புரை ஆற்றினார்

முடிவில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர்  மன்ற நிர்வாகி எஸ்.வாசு நன்றி கூறினார் .

Post a Comment

0 Comments