NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சி நடுரோட்டில் இரண்டு மாடுகள் நேருக்கு நேர் மோதி கொண்டு சண்டை..! பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்

திருச்சி நடுரோட்டில் இரண்டு மாடுகள் நேருக்கு நேர் மோதி கொண்டு சண்டை..! பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்

திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை மெயின் ரோடு பகுதியில் இரண்டு மாடுகள் நேருக்கு நேர் முட்டி கொண்டு சண்டையிடும் காட்சி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.... 


பீமநகர் மார்சிங்பேட்டை பகுதி திருச்சியின் முக்கிய பகுதியாக உள்ளது... திருச்சி மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மாடுகள், நாய்கள் கால்நடைகள் பல்வேறு  சாலையில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிகிறது... பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் திருச்சி மாநகராட்சி மேயர், ஆணையரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை .. இன்று இரவு பீமநகர் மார்சிங்பேட்டை மெயின் ரோடு பகுதியில் இரண்டு கருப்பு மாடுகள் ஜல்லிக்கட்டு காளைகள் போன்று ஒன்றோடு ஓன்று நேருக்கு நேர் முட்டி கொண்டு சண்டையிட்டு கொண்டன...

அப்போது அந்த வழியாக நடந்து சென்ற குழந்தைகள்,பெண்கள், பொது மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்... இது போன்ற கால்நடைகளால் பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது... திருச்சி மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை

Post a Comment

0 Comments