NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** கிராமாலயா சார்பில் மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம்

கிராமாலயா சார்பில் மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம்

மாதவிடாய் ஆலோசனை மையம் என்பது கிராமாலயா நிறுவனத்தின் புதிய முயற்சி. அதிகம் பேசப்படாத மாதவிடாய் பற்றி விரிவாகவும் கூச்சமின்றியும் கலந்தாலோசிக்க ஒரு பொது மேடையாக மாதவிடாய் ஆலோசனை மையம் உள்ளது. மாதவிடாய் மற்றும் பாலியல் கருத்துகள் பற்றிக் கலந்துரையாடவும் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களின் உடல்நலம் பற்றிய முக்கியத்துவத்தை பரிமாறிக்கொள்ளவும் இந்தக் களம் உதவும்.

தற்போதைய கலாச்சாரத்தில் கஃபே எனும் ஒரு பொது இடம், ஒருவர் தம் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள முடியும். தங்கள் தயக்கங்களை தளர்த்தி நண்பர்களுடன் சுதந்திரமாக பேசவும் முடியும். இதே வழக்கத்தை மாதவிடாய் ஆலோசனை மையத்திலும் பிரதிபலிக்கலாம். மாதவிடாய், பாலினம், மனநலம் மற்றும் பிற பொருத்தமான தலைப்புகளில் சுதந்திரமான உரையாடல்கள் இங்கு நடைபெறும். இந்த உரையாடல்கள் மாதவிடாய் ஆலோசனை மைய உறுப்பினர்களிடையே ஒரு செயல்முறை சிந்தனையைத் தூண்டும். அவர்கள் பிறர் பேசுவதை, புரிந்துகொள்ளவும், தம் நிலைப்பாட்டை பிறரின் எண்ணங்களோடு ஒப்பிட்டும் சிந்திக்கத் தூண்டும் செயல்களுக்கு உதவும்.

பல்வேறு குழுக்களுடன் உரையாடும்போது, ஒரு முக்கியமான புரிதல் ஏற்படும். சமூகத்தினரிடையே மாற்றத்திற்கான காரணியை உருவாக்குவது மிகவும் முக்கியம். அதுதான் மாதவிடாய் ஆலோசனை மையத்தின் முதன்மை நோக்கம். மாதவிடாய், பாலினம், பாலியல் மற்றும் பாலியலுறவு மற்றும் இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம் ஆகிய தலைப்புகளில் தொடர் உரையாடல் மற்றும் செயல்பாடுகளின் மூலம் பங்கேற்பாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை நன்கு புரிந்துகொள்ள முடியும்
உண்மைகளை மேலும் நன்கு புரிந்து கொள்ள, மாதவிடாய் ஆலோசனை மையத்தின் உறுப்பினர்கள் தங்கள் அருகிலுள்ள மக்கள் ஃ குடிசைப் பகுதியினருடன் தீவிரமான செயல்பாடுகளால் மிகவும் பின்தங்கிய மற்றும் சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வில் தகுதியான மாற்றங்களை உருவாக்க முடியும்.

மாதவிடாய் ஆலோசனை மையங்கள் குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துவக்கப்படவேண்டும். மாதவிடாய் ஆலோசனை மையத்தின் பங்கேற்பாளர்கள், தலைமைப் பண்பு அனுபவத்தை பெறுவார்கள். மாதவிடாய் ஆலோசனை மையத்தின் முன்னேற்பாளர்கள் அந்தந்த வளாகங்களில் குழு செயல்பாடுகள் ஒருங்கிணைத்து சக மாணவர்களை மாதவிடாய் ஆலோசனை மையங்களில் உறுப்பினர்களாக சேர ஊக்குவிப்;பார்கள். இந்த பங்காற்றலுக்கு மாணவர்கள் தம் திட்டமிடல்களாலும் முன்முயற்சிகளாலும் தம் எண்ணங்களைச் செயல்படுத்துவதாலும் மாணவர்களின் திறமை அதிகரிக்கும்.

ஒரு சமூகத்தின் அனுபவங்கள்

மாதவிடாய் ஆலோசனை மையத்தின் முக்கிய அம்சங்கள், மனநலம், மகளிர் நலம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் போன்றவற்றை தனிநபர்கள் துணிந்து பேசுவதற்கும் அவர்களின் எண்ணங்கள் ஃ அனுபவங்களை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்க வேண்டும். வேகமாக ஓடும் நமது வாழ்க்கையில் மற்றவர்களுடனும் நம்முடனும் தொடர்பு கொள்வதை அடிக்கடி இழந்து விடுகிறோம். மாதவிடாய் ஆலோசனை மையத்தின் பங்கேற்பாளர்கள் தம் எண்ணங்களை பாதுகாப்பாக ஒருமித்த கருத்து உள்ளவர்களுடன் இணைந்து தாமும் சமூகத்தின் ஒரு அங்கமென்ற உணர்வோடு ஒருவருக்கொருவர் தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வர்.

தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய அறிவைப் பெறுதல்.

வழக்கமான விழிப்புணர்வுப் பட்டறைகள் மூலம் மாணவ மாணவிகள், மாதவிடாய் பாலியல், பாலினம் மற்றும் பாலின தலைப்புகள் பற்றிய முக்கியமான தகவல்களையும் அறிவையும் பெறுவார்கள். ஆனால் இந்த மையத்தில் உரையாடல்கள்  வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், பெரும்பாலானோர்; நமது உடலின் செயல்பாடுகள் பற்றிய தவறான புரிதலில் இருந்து விடுபட்டு சரியான தகவல்களைப் பெறுகின்றனர். மாதவிடாய் ஆலோசனை மையத்தில் மாணவர்கள் இந்த தலைப்புகளில் சரியான மற்றும் நம்பகரமான அறிவைப் பெற்று, அவர்களின் தனிப்பட்ட நல்வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

மாற்றம் கொண்டு வர ஒரு வாய்ப்பு

களங்கங்களை சீர்செய்வதில் ஆர்வமுள்ள குழுவின் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆர்வத்தை சமூக நலத்திட்டங்கள் மூலம் செயலாக மாற்ற முடியும்.

சுய வளர்ச்சிக்கான அனுபவம்

சிந்தனையைத் தூண்டும் உரையாடல்கள், பிரதிபலிப்புகள் மற்றும் செயல்பாடுகளில் முழுமனதாக ஈடுபடுவதால் மாதவிடாய் ஆலோசனை மையத்தின் பங்கேற்பாளர்கள், நேர்மறையான மன உணர்வுத் தூண்டுதலைப் பெறுவார்கள்.

Post a Comment

0 Comments