NEWS UPDATE *** தென்காசி மாவட்டம் கடையத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது ************** “பாஜக – அதிமுக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி… மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்! *** ரம்ஜான் கோலாகலமாக கொண்டாட்டம்...! இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ரம்ஜான் கோலாகலமாக கொண்டாட்டம்...! இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம் இஸ்லாமியர்களாக இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்....உலகம் முழுதும் இன்று ரம்ஜான் திருநாள் உற்சாகமாக இஸ்லாமிய கொண்டாடி வருகின்றனர்......


காலையில் புத்தாடை அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி அண்ணா நகர் உழவர்  சந்தையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பெருநாள் தொழுகை மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சபீர் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் காரணமாக

பள்ளிவாசல் திறக்கப்படாமல் அவர்கள் வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு நோய் குறைவு காரணமாக


அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது காரணமாக குடும்பம் குடும்பமாக பள்ளிவாசல்களில், மைதானங்களும் தொழுகையில் ஈடுபட்டனர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சபீர் அலி ராஜஸ்தானில் பாலி இப்பகுதியில் பள்ளிவாசலில் உள்ள இடத்தில் காவி கொடியைக் கட்டியுள்ளனர். மேலும் மத்திய பிரதேசத்தில் ராமநவமி கலவரத்தை தொடர்ந்து முஸ்லிம்கள் வீடுகள் இடிக்கப்பட்டு இன்றும் நாளையும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் நியாயமும் தர்மமும் உயிரோடு தான் இருக்கிறது என்று கேள்வியை ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது இதனை வன்மையாக கண்டிக்கிறோம்,

சமீப காலமாக இந்தியா முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் எல்லை தாண்டிச் சென்றுள்ளது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments