அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக தாய்நாட்டின் ஜனநாயகம் மீட்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக
பாலக்கரை ரவுண்டானா அருகில் நம் தாய் நாட்டின் ஜனநாயகம் மீட்க வேண்டி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட தலைவர்
ஷேக் அப்துல்லாஹ் தலைமை தாங்கினார்கள்.
செயலாளர் ஐனுல்லா மகுது முன்னிலை வகித்தார்கள். திருச்சி
மாவட்ட பொருளாளர் உசேன் ஷரீப் ஆர்ப்பாட்டத்தை தொகுத்து
வழங்கினார்கள்.
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காஜா
முஹையத்தின் சாஹிப் தமிழ் மாநில பொது செயலாளர் ஜாவித்
உசேன் மாபெரும் கண்டன உரை ஆற்றினார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பழங்குடியினர் நபர்கள் மாடு கடத்தியாக அடித்து
கொல்லப்பட்ட நிகழ்வு, மசூதி மற்றும் கோவில் ஒற்றுமையின் சின்னத்தை
சிதைக்க பாடுபடும் முயற்சிகள், உச்சநீதிமன்றத்தில் ஏழை, எளிய மக்கள் நீதி
பெற முடியாத சூழல் போன்ற நிலை நாட்டில் அதிமாக உருவாகியுள்ளது.
இவைகளை முற்றிலும் தடுத்து நாட்டின் மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ
நீதிமன்றங்களும், சட்ட ஒழுங்கு அதிகாரிகளும் கை கோர்த்து செயல்பட
வேண்டுமாய் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1991 ல் இயற்றப்பட்ட PLACES OF WORSHIP ACT என்கிற இந்திய அரசியலமைப்பு
சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். இந்த சட்டத்தையும், வழியாட்டு
தளங்களை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்கள் மீதும் பொது
அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக தண்டனை மற்றும் அபராதம் விதிக்க
வேண்டும்.
மத உணர்வை துண்டும் விதமாக இருக்கும் விஷயங்களில் நாட்டினுடைய
பிரதமர் அவர்கள் தலையிட்டு அனைவருக்குமான தலைவராக தன்னை உறுதி
செய்ய வேண்டும்.
பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்திற்கும், முயற்சி எடுத்த
தமிழக அரசுக்கும் நன்றி பாராட்டி அதே போல் அப்பாவி சிறைவாசிகளின்
விஷயத்திலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டம்
மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட வட்ட மற்றும் மகளிரணி நிர்வாகிகள்
திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments