NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா.

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா.

 திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது..


  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரேசா பல்கலைக்கழகம் மற்றும் D.K.S.விளையாட்டு கழகம் சார்பில் கடந்த  ஜூன் 4 மற்றும் 5 ம் தேதிகளில் மாநில அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்..


இதில் திருச்சி போதிதர்மன் தற்காப்பு கலை கூடத்தை சேர்ந்த சிலம்ப விளையாட்டு வீரர்கள் பயிற்ச்சியாளர் சிலம்ப மாஸ்டர் ம. மாணிக்கம் அவர்கள் தலைமையில் கலந்து கொண்டனர்  இப்போட்டியில் தனி பிரிவுகளில்   சாரா, நிஷாந்த் ஜசக்  நியூட்டன் சிவ தருண் மிதிலேஷ் தினேஷ் முசுவர்,கோகுல், வினய், மவுலேஷ்வரன் பூகவின்,சேஷா, பாலாஜி,சுஜிவன் ஜாக்,ஆதிநாத், ஜெனிபர் நட்டாஷா உள்ளிட்ட 16 சிலம்ப விளையாட்டு வீரர்கள் பதகங்களை வென்று திருச்சிக்கு பெருமை சேர்த்தனர்


சிறந்த சிலம்ப ஆசான் விருதை  போதிதர்மன் தற்காப்பு கலை கூடத்தின் சிலம்ப விளையாட்டு பயிற்ச்சியாளர் ம. மாணிக்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது இவர்களுக்கு  திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு கல்லுக்குழி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது...



 இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய தடகள விளையாட்டு வீரர் ஏ. தமிழரசன் (மேற்பார்வையாளர் தென்னக ரயில்வே)  வழக்கறிஞர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஜமால் முகமது கல்லூரி உதவி பேராசிரியர் Dr. ஷகிலா பானு உள்ளிட்டோர்  கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிலம்ப விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர் ...


 இந்நிகழ்வில்  அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளருமான டி.சுரேஷ் பாபு தடகள விளையாட்டு பயிற்ச்சியாளர் முணியான்டி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலாளர் அல்லி கொடி  போதிதர்மன் தற்காப்பு கலை கூடத்தின் சிலம்ப விளையாட்டு பயிற்ச்சியாளர் ராஜேஷ் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் மற்றும் திரளான சிலம்ப விளையாட்டு வீரர்கள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments