ரயில் நிலையங்களில் உள்நாட்டு தயாரிப்பு களை ஊக்குவிப்பதற்காக ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் தொடங்கப்பட்டது.. இந்த திட்டத்தின் 5 ஆம் கட்டம் நேற்று முதல் வருகிற 7ஆம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது..
அந்த வகையில் திருபுவனம் பட்டு விற்பனையக்தை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் திருச்சி தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பு தலைவர் ரித்து அகர்வால் ஆகியோர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தனர்...
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வர்ணம் பூசப்பட்ட தஞ்சை ஓவியங்களை காட்சிப்படுத்தும் விற்பனை இடத்தை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.. ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டம் தஞ்சை ரயில் நிலையத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டது அடுத்த கட்ட 9 ரயில்வே நிலையங்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது .
முந்தைய கட்டங்களில் தஞ்சையில் உள்ள இந்த ஒரு நிலையம் ஒரு பொருள் விற்பனையகம் மூலம் ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 145 மதிப்பிலான கலை பொருட்கள் விற்கப்பட்டன
0 Comments