BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** பா.ஜ.க தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா...? திருச்சியில் சீமான் பேட்டி

பா.ஜ.க தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா...? திருச்சியில் சீமான் பேட்டி

 2018 ஆம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான  நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியனருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 2ல் ஆஜரானார் - இதே போல் வழக்கு பதிவு செய்யப்பட்ட மதிமுகவினரும் ஆஜராகினார்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் : 

வழக்கு தொடர்பாக : மதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்த பகையும் இல்லை - அண்ணன் வைகோவிற்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.


ராஜிவ் காந்தி குறித்து கருத்து கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீமானை எதிர்த்து திருச்சியில் நடந்த போராட்டம்  குறித்த கேள்விக்கு ? அப்படியாவது காங்கிரஸ் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறது என்பதில் மகிழ்ச்சி...கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறும் நீங்கள் உங்கள் தொலைக்காட்சியில் அரைமணி நேரம் என்னை பேச விடுங்கள்.


சென்னையில் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது - இதற்கு எல்லாம் குண்டாஸ் இல்லையா ? - 

சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்பது...வாதம் பிரதி வாதம் செய்து தான் எதையும் உருவாக்க முடியும் - யூடியூபர்கள்  மாரிதாஸ்,சங்கர் என பலர்கள் கருத்துக் கூறினால் எதிர் கருத்து தான் கூறவேண்டும் தூக்கி உள்ளே வைக்க கூடாது.

பேரறிவாளன் விடுதலை நாங்கள் எந்த வகையில் கொண்டாடவில்லை - கொண்டாட வேண்டுமென்றால் என் தம்பி விடுதலைக்கு நான் தான் முக்கியமாக கொண்டாட வேண்டும்.


பேரறிவாளன் நிரபராதி இல்லை என்று கூறும் அண்ணாமலை மோடி மற்றும் அமித்ஷா குஜராத்தில் நடைபெற்ற கலவரம் என்னவென்றே தெரியாமல் போனதா ? என்பதை கூற வேண்டும்.


திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமை உருவாக்கியவர் கருணாநிதி - இதனை மூட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.


Q Branch என்கிற சித்திரவதை சிறையை உடனடியாக மூடுங்கள் - இலங்கை தமிழகர்களில்... அம்மாவை தனியாக, அப்பாவை தனியாக குழந்தையை தனியாக முகாம்களில் அடைகிறார்கள் - ஈழத்தமிழர்களுக்கு அதைச் செய்கிறோம் இதை செய்கிறோம் என்று கூறுவது உங்களுக்கு நாடகமாக இல்லையா.


பிரதமர் பொறுப்பு ஏற்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஒரு முறை என்னை போன்ற செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசட்டும்.


மலையை உடைத்து எம் - சாண்ட் தயாரித்து ஊருக்கு விற்பனை செய்து வருகிறார்கள் மலையை அழித்தால் மீண்டும் உருவாக்க முடியுமா ? இயற்கை வளத்தை திட்டமிட்டு எல்லோரும் சேர்ந்து அழிக்கிறார்கள் - 

இதையெல்லாம் ஏன் பாஜக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகள் கேள்வி எழுப்பவில்லை.


உயர்நீதிமன்றம் ரபேல் ஊழல் விவகாரத்தில் கோப்புகளை கேட்ட போது காணாமல் போனது என்று கூறிய பாதுகாப்பு துறை எப்படி நாட்டை பாதுகாக்கும்.

மோடி,அமித்ஷா உள்ளிட்ட அனைவருமே தேர்வெழுத வேண்டும்..ஒவ்வொரு துறைகளிலும் தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும்தான் அரசியல் தலைவர்களாக உருவாக்க வேண்டும்.


தேர்தலில் பாஜக எங்களைப் போன்று தனித்து போட்டியிடுமா ? என் மரத்திற்கு கீழ் முளைத்து இருக்கும் குட்டை செடி நீ.


வளர்கிறோம் என்று கூறும் நீங்கள் தனித்துப் போட்டி இடுங்கள் - பின்னர் தான் அண்ணாமலை எதையும் கூற வேண்டும்.

Post a Comment

0 Comments