தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, SGM குரூப்ஸ் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 14 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, கண் நீர் அழுத்த நோய், மாறு கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வை கோளாறுகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிட்சை பெற்று சென்றனர். மேலும் இந்நிகழ்வில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை நிர்வாக இயக்குனர்கள் பரஞ்சோதி, நந்தகோபால், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments