// NEWS UPDATE *** ”இந்த கூட்டணிய நல்லபடியா நடத்தணும்... சிறு,சிறு பூசல்களை தவிர்த்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும்” - நிர்மலா சீதாராமன் ***** விரைவில் சுற்றுப்பயணத்தை துவங்குகிறார் த.வெ.க தலைவர் விஜய்.! *** திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை உயிரிழப்பு

திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை உயிரிழப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தனியார் வசம் இருந்த யானைகள், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த யானைகளை மீட்டு அவற்றை பராமரிப்பதற்காக திருச்சி எம்.ஆர் பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.


இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மீட்கப்படும் யானைகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.

எம்.ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரித்து வந்த 26 வயதுடைய யானை ரோகினி இன்று காலை உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.

சுவாச கோளாறு,கல்லீரல்,கிட்னி பிரச்சினை ரோஹினிக்கு இருந்து வந்த நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர் ஆனால் சிகிச்சை பலன் என்று இன்று காலை யானை உயிரிழந்தது.

Post a Comment

0 Comments