// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** திருவெறும்பூரில் சாலையை யார் நோண்டியது என்று தெரியாமல் தவிக்கும் திருவெறும்பூர் பொதுமக்கள்

திருவெறும்பூரில் சாலையை யார் நோண்டியது என்று தெரியாமல் தவிக்கும் திருவெறும்பூர் பொதுமக்கள்

 திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை பகுதியில் சாலையை பறித்துவிட்டு போடாமல் விட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.





திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் அருகே கல்லணை மற்றும் கூத்தைப்பார் பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலை பகுதியில் சாலை15 நாட்களுக்கு முன்பு சாலை பறிக்கப்பட்டது.






அப்படி பறிக்கப்பட்ட சாலை மீண்டும் புதுப்பிக்கப்படாமல் ஜல்லிக்கட்டு போடப்பட்டு உள்ளது. இதனால் கல்லணை சாலை மற்றும் கூத்தைபார் சாலையில் இருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் அடிக்கடி வாகனங்களும் பழுதும் விபத்துகளும் ஏற்படுகிறது.




 மேலும் சாலை பறிக்கப்பட்டுள்ளதால்கல்லணை சாலை வழியாக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில்ஏறி செல்ல முடியாமல் திணறுகின்றன




இது குறித்து அப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் மதுக்கான் நிறுவனம் உள்ளிட்ட பலரிடம் தெரிவித்தும் அவர்கள் தாங்கள் பறிக்கவில்லை என்றும் இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி மழுப்பி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் நாள்தோறும் அப்பாவி பொதுமக்கள் அந்த சாலையில் வாகனங்களை இயக்கும்போது கீழே விழுந்து காயம் அடைவதுடன் வாகனங்களும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.


எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை இருந்து கல்லணை சாலைக்கு பிரிந்து செல்லும் பகுதியில் பறிக்கப்பட்டுள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments