BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி

தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி

 தமிழர்களின் பாரம்பரிய கலையில் ஒன்றான சிலம்பாட்ட கலை பல்வேறு நாடுகளில் புகழ்பெற்று வருகிறது,.இக்கலையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக முதல்வர் சிலம்பாட்டக் கலைகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்து வருகிறார்..அதன் ஒரு பகுதியாக இந்தியன் யூத் பாரம்பரிய சிலம்பாட்ட சங்கத்தின் சார்பில் திருச்சி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி பல்வேறு பிரிவுகளில், சிலம்பம் சிங்கள் ஸ்டிக், டபுள் ஸ்டிக், சிங்கள்,டபுள் sword, வேல் கம்பு, வேல் கம்பு(Spearing), சுருள்வால், சிங்கள்,டபுள் சுருள்வால், மான் கொம்பு, குத்து வரிசை, Touch game (Stick Fencing) நடைபெற்றது,


இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி கோட்டம் மூன்றின் கோட்டத்தலைவர் மதிவாணன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்து சிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது,


இதில் திருச்சி பப்ளிக் ஸ்கூல் முதல்வர் ஸ்வீட்டி ஐரின் இந்தியன் யூத் பாரம்பரிய சிலம்பாட்ட சங்கத்தின் தலைவர் தர்ம சாஸ்தா அமைப்பாளர் சுந்தர வடிவேலன், பொதுச் செயலாளர் வேல்முருகன், வழக்கறிஞர் ஜெகதீஸ்வரன்,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா, மத்தியபிரதேஷ்,பாண்டிச்சேரி, கர்நாடகா,ராஜஸ்தான்,மேற்கு வங்கம்மகாராஷ்டிரா, உத்ரகான்ட், உள்ளிட்ட மாநிலங்களிருந்து  தேசிய அளவிலான 30க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட குழவினர், சுமர் 400க்கும் சிலம்பாட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments