// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டிஏபி பொட்டாஷ் போன்ற உரங்களின் விலையை குறைக்க வேண்டும், யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி - கொள்ளிடம்  வழியாக கரை புரண்டு கடலுக்கு செல்லும் காவிரி நீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும், விவசாய சாகுபடி பயிர்களை அழித்து நாசப்படுத்தும் குரங்கு, பன்றி, மான், காட்டெருமை, மயில் போன்றவைகளை கட்டுப்படுத்த வன பாதுகாவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வடகிழக்கு பருவமழை தண்ணீரை ஏரி குளங்களை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



இச்சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வானத்தோடு திருவோடு ஏந்திநூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



Post a Comment

0 Comments