// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஆதார் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை குறி வைத்து 80 லட்சம் வரை மோசடி செய்த நபர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ஆதார் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை குறி வைத்து 80 லட்சம் வரை மோசடி செய்த நபர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

திருச்சி  சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் (24). 


இதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற பல இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது கார்த்திக் என்ற பார்த்திபன் என்பவர் அறிமுகம் ஆகி இளைஞர்களிடம் தான் மத்திய அரசில் உள்ள ஆதார் சேவையில் பணியாற்றி வருவதாகவும் தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் வேலை வாய்ப்பு தன்னால் வாங்கித் தர முடியும் என்று கூறி 20க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக இன்று பாதிக்கப்பட்ட 6 இளைஞர்கள் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தனர் - மேலும் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments