// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** பிங்க் கலர் குடைகளை பிடித்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

பிங்க் கலர் குடைகளை பிடித்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

நாடு முழுவதும் மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 3-ம் நாளான இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியா டோன்ஸ் பிங்க் என்ற அமைப்பு சார்பில் ரோட்டரி சங்கம், சர்வதேச விமான நிலையம், உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகளையும் சங்கங்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.


அதன் படி 3-ம் நாளான இன்று பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பிங்க் வண்ண குடைகளை பிடித்தபடி மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தும் விதமாக நடை பேரணியை திருச்சி விமான நிலைய வளாகத்தில் இன்று நடத்தினர்.


இந்த விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக ரத்னா குளோபல் ஹாஸ்பிடல் டாக்டர் பிரியா பிரவீன் , திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், இந்தியா டோன்ஸ் பிங்க் ஆனந்தகுமார், ஷான்ஸ் பேஷன் ஷான்ஸ், 3000 ரோட்டரி சங்க பெண்கள் அமைப்பினர்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பலர் கலந்து கொண்டனர். 



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டு செல்லும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் அமைப்பின் நிறுவனர் ஆனந்தகுமார், துணைத்தலைவர் வினோ ஹாசன், செயல் அலுவலர் சங்கீதா பழனி, ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் எல்சிஏ எண்டர்டைன்மென்ட் ரபீக் உள்ளிட்டோர் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

Post a Comment

0 Comments