// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தமிழ் புலிகள் கட்சி ஆதரவு

பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தமிழ் புலிகள் கட்சி ஆதரவு

திருச்சியில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்....


சமூக நீதி உள்ளிட்ட மாநில உரிமைகளை பாதுகாத்திடவும், சனாதன சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாத்திடவும் திராவிட மாடல் ஆட்சி தொடர எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். 



மேலும் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த மனித தன்மையற்ற சாதிவெறி செயலை கண்டித்து வரும் ஜனவரி 9 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments