NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** செஸ் போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு

செஸ் போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி இன்று நடைபெற்றது. திருச்சி தென்னூர் அண்ணாநகர் அல்மாலுசண்ட் பள்ளியில் நடைப்பெற்ற இந்த போட்டியை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் மாவட்ட தலைவர் யஹ்யா தொடக்கி வைத்தார். இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


5 வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தனி பிரிவாகவும் போட்டி நடத்தப்பட்டது. 


இதில் இரண்டு பிரிவிலும்   முதல் பரிசு பெற்ற மாணவர்கள் இருவருக்கு சைக்கிளிலும், இரண்டாம் இடம் பெற்ற இருவருக்கு ஸ்மார்ட் வாட்சும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி 29வது வார்டு கவுன்சிலர் கமால் முஸ்தபா, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருச்சி மாவட்ட தலைவர் ஹஜ் மொய்தீன் அவர்கள் கலந்துகொண்டு பரிசளித்தனர்.

Post a Comment

1 Comments

  1. சிறந்த முயற்சி... வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்💐

    ReplyDelete