// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** தமிழக கவர்னரை கண்டித்து முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னரை கண்டித்து முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் ஆர்ப்பாட்டம்

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத கவர்னரை  கண்டித்தும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தியும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து  5 சதவீதமாக உயர்த்த கோரியும்...


உதயநிதி ஸ்டாலினை துணை முதல் அமைச்சராக அறிவிக்க வலியுறுத்தியும் காட்டூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரியும் காமராஜ் நகர் பகுதியில் உள்ள குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி அரியமங்கலத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத் தலைமை தாங்கினார்‌..



தெற்கு மாவட்ட செயலாளர் முகமது இக்பால், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சபீக் , மாநில இளைஞரணி தலைவர் முஸ்தபா, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அப்துல் சமது, திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் ஜான் பாஷா , செயற்குழு உறுப்பினர் சாகுல் மாவட்ட இளைஞரணி பொருளாளர் அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார்



இதில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொது செயலாளர் இடி முரசு இஸ்மாயில் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்

Post a Comment

0 Comments