BREAKING NEWS *** டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் *** திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தேசிய தலைவர் பங்கேற்பு

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தேசிய தலைவர் பங்கேற்பு

தமிழக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (பிப்.27) கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தெஹ்லான் பாகவி, முகைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். 


இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் நஸூருத்தீன், பொருளாளர் எஸ்.அமீர் ஹம்சா, செயலாளர்கள் டி.ரத்தினம், அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், நஜ்மா பேகம், வர்த்தகர் அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி, எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முகமது ஆசாத், எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர்கள் அம்ஜத் பாஷா,  ஷஃபிக் அகமது, சுல்ஃபிகர் அலி, பஷீர் சுல்தான், டாக்டர். ஜமிலுன் நிஷா, பயாஸ் அகமது, ஹஸ்ஸான் இமாம், முஜிபுர் ரஹ்மான், ராஜா ஹூசைன், முகமது ரஷீத், ஜஹாங்கீர் ஆருஸி ஆகியோர் கலந்துகொண்டனர். 


கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள், எதிர்வரும் தேர்தல் சூழல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் : 

1.எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தன்னுடைய நிலைப்பாடு மூலம் ஒரு மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறது. மதவாத சக்திகளை வீழ்த்தும் வகையில் அந்த நிலைப்பாடு அமையும். அந்த வகையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட  மாநில தேர்தல் குழு மூலம் தேர்தலுக்கான பணிகளை விரைவுப்படுத்துவது, கட்சியின் கிளைக் கமிட்டி கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டிகளை அமைப்பது, அதற்கான வியூகங்களை வகுப்பது, தேர்தலை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை செய்வது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் பணிக்குழு கவனம் செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


2. தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய தமிழக அரசு சச்சார் கமிட்டியை போன்றதொரு கமிட்டியை அமைக்க வேண்டும். அதன்மூலம் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றில் அவர்களுக்கான  சமவாய்ப்பையும், சம பங்கீட்டையும் மேம்படுத்தும் வகையில் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சச்சார் கமிட்டி பரிந்துரைகளிலும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு  தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்நிலைகள் குறித்து அறிய விரைவாக கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.


3. பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட சாதிகள் துணைத் திட்டத்திற்கான நிதியில் (SCSP) சுமார் ரூ.5,318 கோடி நிதியை தமிழக அரசு பயன்படுத்த தவறிவிட்டுள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது. பட்டியலிடப்பட்ட சாதிகள் துணைத் திட்டத்திற்கான நிதித்திட்டம் (SCSP) தொடங்கப்பட்ட 1980லிருந்து தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் மட்டுமே அதனை சிறப்பாக செயல்படுத்தி வந்த நிலையில், தற்போது தமிழகமும் அதில் பின்தங்குவது வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  


தமிழக அரசு  பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக அந்த சமூக மக்களை சென்றடையும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்கி, முழுமையாக செயல்படுத்திடவேண்டும். பட்டியலிடப்பட்ட சாதிகள் துணைத் திட்டத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா அரசுகள் தனிச் சட்டம் இயற்றியிருப்பதுபோல், தமிழக அரசும் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


4.ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லை என்பதும், முழுக்க முழுக்க அது மாநில அரசின் கைகளில் மட்டுமே உள்ள மாநில உரிமை சார்ந்த விஷயம் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு, தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை பாரபட்சமின்றி, அவர்களின் வயதுமுதிர்வு, உடல்நலன், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக இயற்ற வேண்டும். 


தமிழக அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கருணையோடு குறைந்தபட்சம் வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய முன்வர வேண்டும்.


அதேபோல், சிறைவாசிகளின் பரோல் நடவடிக்கையில் எவ்வித பாரபட்சமும் பாராமல் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் மற்ற கைதிகளைப் போன்று வழிக் காவல் இல்லாத சுதந்திரமான பரோல் வழங்க வேண்டும் என இந்த செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Post a Comment

0 Comments