BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ரஹ்மத் பள்ளிவாசல் மற்றும் மஹ்மூதிய்யா மதரஸா ஆண்டு விழா - ராயல் சித்திக் பங்கேற்பு

ரஹ்மத் பள்ளிவாசல் மற்றும் மஹ்மூதிய்யா மதரஸா ஆண்டு விழா - ராயல் சித்திக் பங்கேற்பு

திருச்சி ரஹ்மத் பள்ளிவாசல் மற்றும் மஹ்மூதிய்யா மதரஸாவின் 22 வது ஆண்டு விழா நடைபெற்றது... இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட செயலாளர்  ராயல் சித்திக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


ரஹ்மத் பள்ளிவாசல் தலைவர் அப்துல் வாகித் அவர்கள் தலைமையில் மதீனா பள்ளிவாசல் உடைய தலைவர் சிக்கந்தர் ஹாஜியார் அப்துல் மஜீத் வாப்பா உள்ளிட்ட ஏழு பள்ளிவாசல்களுடைய தலைவர் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாய் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.


பயான் பேச்சுப்போட்டி மார்க்க விளக்க நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்று மாணவர்கள் அசத்தினார்கள்



நடுவர்களாக மதினா பள்ளிவாசல் உடைய தலைமை இமாம் நூர் முகமது மத்துமி அவர்கள் கௌசர் மஜித் மதுரை ரோடு பள்ளியினுடைய தலைமை இமாம் பஸீர் அகமது அன்வாரி அவர்களும் கலந்து கொண்டார்கள்


விழா பேரூரையாக திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமாவின் செயலாளரும் ஜென்ரல் பஜார் பள்ளிவாசலின் தலைமை இமாமான மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்எஸ் இன்னமுல் ஹசன் காசிபி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்



இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழா குழுவின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியினை ரஹ்மத் பள்ளிவாசல் உடைய பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

இறுதியாக ரஹ்மத் பள்ளிவாசல் உடைய செயலாளர் அன்பு அண்ணன் ஏ அப்துல் ரஷீத் அவர்கள் நன்றி உரை கூற விழா சிறப்பாக நிறைவுற்றது.



Post a Comment

0 Comments