// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது

போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் கல்லூரியுடன் இணைந்து வெராண்டா ரேஸ் பயிற்சி நிறுவனம் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளுக்கான நிகழ்ச்சியை நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்  விஜய லெட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத்திறை தலைவர்  பாலமுருகன்  வரவேற்புரை நிகழ்த்தினார்.



நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தாட்கோ தலைவர் மதிவாணன் , தாட்கோ நிர்வாக இயக்குநர்  கந்தசாமி  மற்றும்  வெராண்டா ரேஸ் நிறுவன தலைவர் பரத் சீமான், திருச்சி கிளை நிர்வாக தலைவர் ராகுல் திலகந்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்கள்.


நிகழ்ச்சியில் சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.


 நிகழ்ச்சியின் நிறைவாக திருச்சி கிளை மேலாளர்  சாந்தா ஷீலா  நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

0 Comments