// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அவசர ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை அவசர ஆலோசனை கூட்டம்

மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டத்திற்கு  பல்வேறு அரசியல் கட்சியினர் இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


பொது சிவில் சட்டம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் அவசர ஆலோசனை கூட்டம் மெளலானா முஃப்தி முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி ஹழ்ரத் கிப்லா தலைமையில் தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் நடைபெற்றது.


இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால்  சட்ட ரீதியாக எதிர் கொள்வது எப்படி என ஆலோசனை செய்யப்பட்டது.. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

இந்த கூட்டத்தில் மிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மெளலானா S.முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள்,

 திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மெளலானா N.S இன்ஆமுல் ஹஸன் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள்,

திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் மெளலானா M. அல்அமீன் யூசுஃபி அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு உலமாக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments