// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** அதிமுக 52 வது ஆண்டு விழா எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை

அதிமுக 52 வது ஆண்டு விழா எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை

 அதிமுக கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி சோமரசம்பேட்டையில், எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...


மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக கட்சியின் 52 வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு சோமரசம்பேட்டையில்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அதனைத் தொடர்ந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்




பின்னர் அதிமுகவின் கட்சி கொடியை ஏற்றி வைத்து  பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.ஜெயக்குமார் செய்திருந்தார்.

Post a Comment

0 Comments